Saturday, October 07, 2006

அ·ப்சல் மரண தண்டனை --- சில எண்ணங்கள்

தீவிரவாதத்திற்கு துணை போனதாக அ·ப்சலுக்கு மரண தண்டனை வழங்கியது சரியா தவறா என்று தனிப்பட்ட அளவில் கருத்து எதுவும் கூற வரவில்லை. இதன் பின்னணி பற்றி ஓரளவு தெரியும் என்பது தவிர, முழுமையாக படித்துத் தெளியாததும் இதற்கு ஒரு காரணம். சட்டம் தன் பணியை செய்து ஒரு தண்டனை வழங்கியுள்ளது, அவ்வளவே !

இந்த மரண தண்டனை குறித்து, பொதுவாக பல கருத்துக்கள் நிலவுகின்றன.

1. இஸ்லாமியர் (தண்டனைக்கு) ஆதரவாகப் பேசினால், அவர் கட்டாயத்தின் பேரில் சொல்கிறார் என்று அவர் நேர்மையை சந்தேகிப்பது ! சட்டம் தன் கடமையை செய்தது என்ற வகையில், வாய் மூடி இருந்தால், அவர் பாகிஸ்தானிய ஆதரவாளர், தேசப்பற்று இல்லாதவர் என்று குற்றம் சாட்டுவது !

2. இஸ்லாமியர் அல்லாதோர், ஆதரவாகப் பேசினால், அவர்களை (எல்லாரையும் அல்ல) ஆர்.எஸ்.எஸ் / இந்துத்வா என்று முத்திரை குத்துவது !

3. மிதவாதிகளையும், பேசாமல் இருப்பவர்களையும் கூட, "பொதுப்புத்தி" உடையவர்கள் என்று அறிவுஜீவிகள் நிராகரிப்பது ! சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் என்று ஜனநாயகத்தில் சொல்வது, நிச்சயம் "பொதுப்புத்தி" கிடையாது !

4. தண்டனைக்கு எதிரானவர்களை, சமூகம் உய்வு பெற போராடும் "மாற்றுச் சிந்தனையாளர்கள்" என்று ஓவராகச் சிலாகிப்பது !

என்று (எல்லா ஊடகங்களையும் சேர்த்து) நிறையவே கூறலாம்.

நமது ஊடகங்கள், எப்போதும் போல பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி அடிக்கும் லூட்டியின் விளைவாக, (ஜனநாயக உரிமை என்ற பெயரில்) இப்போது அரங்கேறும் அனைத்து கூத்துகளையும் தேசிய அளவிலான அவமானம் என்று தான் கூற வேண்டும். அ·ப்சலின் தண்டனைக்கு எதிராக, காஷ்மீரத்துப் பெண்டிர், "Brother Afsal, We are proud of you" என்று பேனர் கட்டி ஊர்வலம் நடத்துவது மற்றும் "பாராளுமன்றத்தைத் தாக்கியது தேசத் துரோகத்தின் உச்சம்" என்று கூக்குரலிடுவது என்று இரு தீவிர நிலைப்பாடுகளையும், அவற்றின் நடுவே பலவிதமான நிலைப்பாடுகளையும் நாம் பார்க்கிறோம்.

அ·ப்சல், ஜனநாயகத்தின் கோயிலான பாராளுமன்றத்தையே சிதறடிக்க திட்டம் தீட்டியது தேசத் துரோகம், அதனால் அவருக்கு மரண தண்டனை சரியானது என்று வாதிடுவது என் நோக்கமல்ல ! மந்திரிகளையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் காக்க வேண்டி (அவர்களில் பாதிக்கு மேல் காப்பாற்ற லாயக்கற்றவராக இருப்பினும்!) போரிட்டு உயிர் துறந்த பாதுகாப்புப் படைவீரர்களின் தியாகம், இது குறித்து பேசும் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்று. மேலும், திட்டம் தீட்டி சாதாரண பொதுமக்களை குண்டு வைத்துச் சிதறடிப்பது, 'தேசத் துரோகம்' என்ற வரையறைக்குள் வருமா, வராதா ??? அதற்கு மரண தண்டனை வழங்கலாமா, கூடாதா ??? என்ற கேள்விகள் எழுகின்றன. என்னளவில், தீவிரவாதத்தினால், அப்பாவி பொதுமக்களும், (in the line of duty) பாதுகாவலர்களும் உயிரிழப்பது, பாராளுமன்றத் தாக்குதலை விடவும் மிகப்பெரிய விஷயமாகத் தோன்றுகிறது.

அடுத்து, அ·ப்சல் செய்த குற்றத்தின் தீவிரத்தை தள்ளி வைத்து விட்டு, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவிப்பதை "பொதுப்புத்தி" என்று நிராகரிப்பது பற்றிப் பார்ப்போம். ஒரு குற்றத்திற்கு என்ன தண்டனை என்பது, அது நிகழ்ந்த சூழல், விசாரணையின் வாயிலாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டவை, அது போன்ற குற்றங்களைத் தடுக்க deterrent ஆக தீர்ப்பு இருக்க வேண்டிய அவசியம், என்று பல விஷயங்களைச் சார்ந்தது. Each case is unique, No two cases are similar என்பதையும் நினைவில் கொள்வதும் அவசியம்.

மரண தண்டனை எதிர்ப்பாளர்கள், ஒரு நாகரீகமான சமூகத்தில், அரசாங்கமே, தண்டனை என்ற பெயரில் ஒரு 'கொலையை'ச் செய்வதை அநாகரீகமான செயலாகவும், மனித மேம்போக்குச் சிந்தனைக்கு ஒவ்வாத ஒன்றாகவும் பார்க்கிறார்கள் ! இதிலும், முரண் உள்ளது !!! இப்படி, பொத்தாம் பொதுவாக, 'நாகரீக' சமுதாயம் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு, திட்டம் தீட்டி, குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதம், எதிர்க்கத் திராணியில்லா இளம் சிறுமியை வன்புணர்ந்துக் கொல்லும் வக்ரம் போன்றவைகளில் ஈடுபடும் கயவர்கள், "நாகரீக" சமுதாயத்திலிருந்து களையப்பட வேண்டியவர்களே என்ற பதிலை கூற இயலும். மரண தண்டனையை எதிர்ப்பவர்களின் "பொதுப்புத்தி" என்று அவர்கள் கூறும் காரணங்களையும் எளிதாக நிராகரிக்க இயலும் !!!

போரில் ஈடுபடுவதும், மிருகங்களை மதத்தின் பெயரால் பலியிடுவதும் கூட நாகரீகமான சமுதாயங்கள் செய்யக் கூடாதது தான் ! தீவிரமான குற்றங்களால், தனிப்பட்ட அளவில் பெருமளவு பாதிக்கப்பட்ட / பாதிக்கப்படும் வாய்ப்புள்ள ஜீவன்களுக்கும், சாதாரண பொதுமக்களுக்கும், அரசும், சட்டமும், சமூகமும் நம்பிக்கையூட்டும் வண்ணம் செயலாற்றுவது மிக அவசியம் ! சமூகத்திற்கு அது கடமையும் கூட ! இதையே மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்.

அடுத்து, அ·ப்சலின் குடும்பத்தினரை குடியரசுத் தலைவர் சந்தித்தது சரியான ஒன்றா ? குடியரசுத் தலைவர் தங்களைச் சந்திக்க வேண்டும் என்று மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒவ்வொரு குற்றவாளியின் குடும்பமும் எதிர்பார்த்தால் என்ன செய்வது ? இப்போது சந்தித்தது, ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடாதா ? மேலும், குடியரசுத் தலைவர் நேரடியாக மன்னிப்பை வழங்குவதில்லை, காபினெட் வழங்கிய மன்னிப்பை ஊர்ஜிதம் செய்கிறார், அவ்வளவே ! இந்த விஷயம் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

(போலி)மதச்சார்பின்மையை போற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் (இவர்களை காப்பாற்றத் தான் ராணுவ வீரர்கள் பலர் உயிர்த் தியாகம் செய்தார்கள்!) தற்போது வாய் மூடி மௌனிகளாக இருப்பது வேதனையான ஒரு விஷயம். இவர்களின் வேஷம் அடிக்கடி இப்படி கலைவதும் நல்லது தான், என்ன, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டால் சரி !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 239 ***

34 மறுமொழிகள்:

Muthu said...

//காபினெட் வழங்கிய மன்னிப்பை ஊர்ஜிதம் செய்கிறார், அவ்வளவே ! இந்த விஷயம் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.//

true..that is why i feel the decision will be a political one...

மாயவரத்தான் said...

இந்த விஷயத்தில் நடுநிலையோடு அலசப்பட்டிருக்கும் பதிவு என்று கண்டிப்பாக இந்தப் பதிவிற்கு நான் வோட்டு போடுவேன்.

enRenRum-anbudan.BALA said...

நன்றி, முத்து.

மாயி,
வாங்க, பார்த்து ரொம்ப நாளாச்சு.
//இந்த விஷயத்தில் நடுநிலையோடு அலசப்பட்டிருக்கும் பதிவு என்று கண்டிப்பாக இந்தப் பதிவிற்கு நான் வோட்டு போடுவேன்.
//
நன்றி. நீங்க சொன்னா ஒத்துக்கறேன் :)

-L-L-D-a-s-u said...

Good Post ..

said...

எல்லா பதிவர்களையும் வாரி இருக்கிறீர்கள், ஆனால் உங்கள் கருத்து என்ன என்பதை இன்னும் தெளிவாக்கவில்லை என்றே தொன்றுகிறது....எதற்கும் இன்னுமொறு முறை படித்துவிடுகிறேன்.

உலகன் said...

அன்புள்ள பாலா,

ஏதோ உணர்வுவேகத்தில் கொலை செய்து விட்டு தூக்குத்தண்டனை அடைந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு தான், மரணதண்டனையை தளர்த்துவதற்கு கோருவதற்கான அத்தனை தகுதிகளும் இருக்கிறது. தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோருபவர்களும் அது போன்ற நபர்களை கருத்தில் கொண்டுதான் கோரிக்கை எழுப்புகிறார்கள்.

ஆனால் இங்கு கதையே வேறு. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் அஸ்திவாரமான பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தி தமது வல்லமையை (?) முட்டாள்தனமாக நிரூபிக்க முயற்சித்த ஒரு கூட்டத்தை சேர்ந்த நபருக்கு விதிக்கப்பட்ட தண்டனை இது. இந்த செயல் ஆற அமர மாதக்கணக்காக யோசித்து கூட்டமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றே தவிர, தனிமனிதன் உணர்வு வேகத்தில் செய்தது அன்று. தவிர, இதுவரை சம்பந்தப்பட்ட நபரான அப்சல் இது குறித்து எந்தவித வருத்தமும் பட்டதாக தெரியவில்லை.

விடுதலைப்புலிகள் கூட ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது இமாலய தவறு என்ற அளவிலாவது சொல்கிறார்கள். தங்களது தவறுகளை மன்னித்து தங்களை ஆதரிக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் கெஞ்சுகிறார்கள். அந்த நிலையிலும், விடுதலைப்புலிகளை இந்திய அரசு இதுவரை மன்னிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை கருதும்போது, இந்த விஷயத்தில் பாதுகாவலர்களை தவிர, வேறு ஏதேனும் அமைச்சர்களோ அல்லது எம்பிக்களோ உயிரிழந்திருந்தால் இதுபோன்ற கோரிக்கைகள் எழுந்திருக்காதோ என்னவோ? என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை.

ஆனால், நீதிமன்றம் முழுமையாக விசாரித்து அவருடைய குற்றத்தை உறுதி செய்து, தூக்குத்தண்டனையும் விதித்த நிலையிலும், குற்றவாளியும் தான் மேற்கொண்ட செயல் தவறு என கிஞ்சித்தும் வருத்தப்படாத நிலையிலும், அவருடைய தூக்கு ரத்து செய்யப்படவேண்டும் என்று கோரப்படுவதற்கான எந்த முகாந்திரமும் (வாக்கு வங்கி அரசியலைத் தவிர) இருப்பதாக தெரியவில்லை.

இப்படி ஒரு சூழ்நிலையில், இளகிய மனம் கொண்டவரான ஜனாதிபதி அப்துல்கலாமை, அப்சலின் குடும்பத்தினரை சந்திக்க வைத்து 'எனக்கு அப்பா வேண்டும்' என்று உருக்கம் காட்டுவது எந்த வகையிலும் நியாயமாகப்படவில்லை. கலாமும் இந்த விஷயத்தில் வெறும் அப்போதைய சென்டிமென்ட் உணர்வுகளை வைத்து முடிவெடுக்க முடியுமா என்பதும் தெரியவில்லை.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், அப்சல் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படவேண்டுமென்றால் அவர் தனது தீவிரவாத முயற்சிகள் எவ்வளவு பெரிய தவறு என்பதையாவது உணர்ந்திருக்க வேண்டும், அதற்கான மன்னிப்பினை கோர வேண்டும் என்ற குறைந்த பட்ச தேவைகளையாவது தண்டனை ரத்து செய்ய போராடுபவர்கள் கேட்க வேண்டும் என்பதே என் ஆசை. இது தான், முட்டாள் தீவிரவாதிகளின் தான் தோன்றித்தனத்திற்கு தங்களது அப்பாவி உறவினர்களை இழந்த உலகத்தின் அனைவரின் ஆசையாகவும் இருக்கும் என்பது என் கருத்து.

உலகன் said...

அன்புள்ள பாலா,

ஏதோ உணர்வுவேகத்தில் கொலை செய்து விட்டு தூக்குத்தண்டனை அடைந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு தான், மரணதண்டனையை தளர்த்துவதற்கு கோருவதற்கான அத்தனை தகுதிகளும் இருக்கிறது. தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோருபவர்களும் அது போன்ற நபர்களை கருத்தில் கொண்டுதான் கோரிக்கை எழுப்புகிறார்கள்.

ஆனால் இங்கு கதையே வேறு. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் அஸ்திவாரமான பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தி தமது வல்லமையை (?) முட்டாள்தனமாக நிரூபிக்க முயற்சித்த ஒரு கூட்டத்தை சேர்ந்த நபருக்கு விதிக்கப்பட்ட தண்டனை இது. இந்த செயல் ஆற அமர மாதக்கணக்காக யோசித்து கூட்டமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றே தவிர, தனிமனிதன் உணர்வு வேகத்தில் செய்தது அன்று. தவிர, இதுவரை சம்பந்தப்பட்ட நபரான அப்சல் இது குறித்து எந்தவித வருத்தமும் பட்டதாக தெரியவில்லை.

விடுதலைப்புலிகள் கூட ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது இமாலய தவறு என்ற அளவிலாவது சொல்கிறார்கள். தங்களது தவறுகளை மன்னித்து தங்களை ஆதரிக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் கெஞ்சுகிறார்கள். அந்த நிலையிலும், விடுதலைப்புலிகளை இந்திய அரசு இதுவரை மன்னிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை கருதும்போது, இந்த விஷயத்தில் பாதுகாவலர்களை தவிர, வேறு ஏதேனும் அமைச்சர்களோ அல்லது எம்பிக்களோ உயிரிழந்திருந்தால் இதுபோன்ற கோரிக்கைகள் எழுந்திருக்காதோ என்னவோ? என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை.

ஆனால், நீதிமன்றம் முழுமையாக விசாரித்து அவருடைய குற்றத்தை உறுதி செய்து, தூக்குத்தண்டனையும் விதித்த நிலையிலும், குற்றவாளியும் தான் மேற்கொண்ட செயல் தவறு என கிஞ்சித்தும் வருத்தப்படாத நிலையிலும், அவருடைய தூக்கு ரத்து செய்யப்படவேண்டும் என்று கோரப்படுவதற்கான எந்த முகாந்திரமும் (வாக்கு வங்கி அரசியலைத் தவிர) இருப்பதாக தெரியவில்லை.

இப்படி ஒரு சூழ்நிலையில், இளகிய மனம் கொண்டவரான ஜனாதிபதி அப்துல்கலாமை, அப்சலின் குடும்பத்தினரை சந்திக்க வைத்து 'எனக்கு அப்பா வேண்டும்' என்று உருக்கம் காட்டுவது எந்த வகையிலும் நியாயமாகப்படவில்லை. கலாமும் இந்த விஷயத்தில் வெறும் அப்போதைய சென்டிமென்ட் உணர்வுகளை வைத்து முடிவெடுக்க முடியுமா என்பதும் தெரியவில்லை.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், அப்சல் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படவேண்டுமென்றால் அவர் தனது தீவிரவாத முயற்சிகள் எவ்வளவு பெரிய தவறு என்பதையாவது உணர்ந்திருக்க வேண்டும், அதற்கான மன்னிப்பினை கோர வேண்டும் என்ற குறைந்த பட்ச தேவைகளையாவது தண்டனை ரத்து செய்ய போராடுபவர்கள் கேட்க வேண்டும் என்பதே என் ஆசை. இது தான், முட்டாள் தீவிரவாதிகளின் தான் தோன்றித்தனத்திற்கு தங்களது அப்பாவி உறவினர்களை இழந்த உலகத்தின் அனைவரின் ஆசையாகவும் இருக்கும் என்பது என் கருத்து.

enRenRum-anbudan.BALA said...

LL தாஸ¤,
நன்றி.

அனானி,
கருத்து கூறும் அளவில், தெளிவு இல்லை என்று ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேனே, சில எண்ணங்களை பகிர்ந்து கொண்டுள்ளேன், அவ்வளவே !

enRenRum-anbudan.BALA said...

உலகன்,
கருத்துக்களை மிக நேர்த்தியாக, தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். பெரும்பாலும், ஏற்றுக் கொள்ளத் தக்கவையே என்பதில் சந்தேகமில்லை. மிக்க நன்றி, நண்பரே !

எ.அ.பாலா

dondu(#11168674346665545885) said...

தூக்கில் போட வேண்டும் அதுவும் விறுவிறுவென்று. இம்மாதிரித்தான் முன்னால் மக்ஃபூல் பட் தூக்கைத் தள்ளிப்போட, தீவிரவாதிகள் மாத்ரே என்ற தூதரக அதிகாரியைக் கடத்தி அவரை விடுவிக்க வேண்டுமானால் மக்ஃபூலை விடுதலை செய்ய வேண்டும் என்று பேரம் பேச, கடைசியில் மாத்ரே தீவிரவாதிகளால் கொல்லப்பட, மக்ஃபூல் பட் பிறகு தூக்கிலிடப்பட்டான்.

இம்மாதிரியாவது அம்மாதிரி ஏதேனும் நடப்பதற்கு முன்னால் வேலையை முடித்திட வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

எனக்கு என்னவோ இந்த ராய் அம்மணி ஜம்மு கஷ்மீர் விடுதலை இயக்கத் தலைவர்களுடன் கூடிக் குலாவுவதால், பணம் கொடுத்து அந்த அம்மணியை இப்படிச் செய்யச் சொல்கிறார்கள் என்று தோன்றுகிறது.

அருந்ததி பற்றி எனது இந்த பதிவைப் பார்க்கவும்

எலிவால்ராஜா said...

//அடுத்து, அ·ப்சலின் குடும்பத்தினரை குடியரசுத் தலைவர் சந்தித்தது சரியான ஒன்றா ? குடியரசுத் தலைவர் தங்களைச் சந்திக்க வேண்டும் என்று மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒவ்வொரு குற்றவாளியின் குடும்பமும் எதிர்பார்த்தால் என்ன செய்வது ? இப்போது சந்தித்தது, ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடாதா//


இது என்னவோ சரியா படலைங்க.....

எந்த ஒரு இந்தியனுக்கும், அவனது குடுப்பத்திற்கும் இந்திய சட்டம் சில உரிமைகளை கொடுத்தூள்ளது.

குற்றவாளி (இப்பொழுது குற்றவாளி என கூறலாம் என நினைக்கிறேன்) மற்றும் அவனது குடும்பம் ஒரு இந்திய குடிமக்களா அவர்களுக்கு உள்ள சட்ட உரிமைகளை பெறுகிறார்கள். இந்திய குற்றவியல் சட்டத்தில் ஒரு சில குற்றங்களுக்கு குடியரசு தலைவரிடம் மன்னிப்பு கேட்க இடமில்லையா என்ன.

எனக்கு என்னமோ இந்த போராட்டங்கள், குற்றத்தை குறைக்க கேட்டப்பது எல்லாம் ஒரு இந்திய மக்களாக அவர்கள் உரிமைகளை செய்கிறார்கள்.
நினைத்து பாருங்கள் குற்றவாளியோ அல்லது அவனது குடும்பமோ நாங்கள் மனத்தளவில் இந்தியர் இல்லை. நாங்கள் இந்திய அரசிடம் உதவிகேட்கமாட்டோம், மத்த நாட்டிடம் முறையிடுவோம்ன்னு சொல்ல வில்லை.

ஒரு இந்தியர், அவரின் உரிமையை அவருக்கு அளிக்கப்பட்ட உரிமையை பயன்படுத்துகிறார் இதில் எந்த தவறுமில்லை.

ஓகை said...

பாலா, நல்ல பதிவு.

உலகன் அவர்களுக்கு சிறப்பு நன்றி. மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார்.

வஜ்ரா said...

//
எனக்கு என்னமோ இந்த போராட்டங்கள், குற்றத்தை குறைக்க கேட்டப்பது எல்லாம் ஒரு இந்திய மக்களாக அவர்கள் உரிமைகளை செய்கிறார்கள்.
நினைத்து பாருங்கள் குற்றவாளியோ அல்லது அவனது குடும்பமோ நாங்கள் மனத்தளவில் இந்தியர் இல்லை. நாங்கள் இந்திய அரசிடம் உதவிகேட்கமாட்டோம், மத்த நாட்டிடம் முறையிடுவோம்ன்னு சொல்ல வில்லை.
//

அவிங்க எதவேணாலும் கேக்கட்டும்..அவிங்க கேக்குறதுக்கு உரிமை இருக்கு..(அவிங்க குடும்பத்துக்கு மட்டும் தான்)

ஆனா கஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏன் இந்த சல சலப்பு?

தில்லியில் ஏன் அறிவு சீவிகள் கூட்டம் போட்டு "குந்தி"கிட்டு கெடக்கணும்?

(If clemency be given now,) It will be seen as the Indian state's capitulation before organised pressure. India, in other words, will be seen to lack the political and moral backbone to uphold its own laws. ...

It is not very pleasant to acquiesce in capital punishment. However, there are crimes which call for the severest punishment because the perpetrators are unwilling to subject themselves to the same moral codes that determine civilised existence.The jihadis crossed the lakshman rekha long ago. A show of indulgence towards them is akin to suggesting that there are no boundaries which govern right and wrong. If that is so, why should we bother with Durga Puja and Dussehra?

-சொன்னவர் ஸ்வபன் தாஸ்குப்தா.

VSK said...

சட்டத்தை மதிக்கும் எவனும், சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்தல் முறையற்ரது.

இவர்கள் வீட்டில் ஒருவராக அந்த 17 பேரில் ஒருவர் இருந்தாலும் இப்படிப் பேசுவார்களா?

எனக்கு ஒரு சந்தேகம்!

இவர்களின் தலைகளே வாய்மூடி மௌனியாய் உட்கர்ந்து கொண்டிருக்கும் போது, இவர்கள் ஏன் இப்படிக் குதிக்கிறார்கள்?

இல்லை அவர்களின் தூண்டுதலால்தான் இப்படிச் செய்கிறார்களா?

நல்ல பதிவு, பாலா.

said...

100 குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தைக் கொண்ட நம் நாட்டின் இறையாண்மைக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்து விடக் கூடாது என எதிர்பார்ப்பதில் தவறொன்றும் இருப்பதாகவும் தெரியவில்லை.///


romba budhdhisali thanama oruththar ithai ezuthi irukkaar.

thappi pOna 100 kuRRavaali .. naatla irukkiRa 10000 nirabaraathigalai konnu pOdaraan sir athukku enna solreenga? intha oruththan saagarathai paththi ivvala kavalai padareengalE.. ivanaala seththavanga kudumbam enna summaavaa ??

Unknown said...

மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள் பாலா.

//(போலி)மதச்சார்பின்மையை போற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் (இவர்களை காப்பாற்றத் தான் ராணுவ வீரர்கள் பலர் உயிர்த் தியாகம் செய்தார்கள்!) தற்போது வாய் மூடி மௌனிகளாக இருப்பது வேதனையான ஒரு விஷயம். இவர்களின் வேஷம் அடிக்கடி இப்படி கலைவதும் நல்லது தான், என்ன, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டால் சரி !//

உண்மை.வேதனையான உண்மை.

நன்றி கெட்ட இந்த அரசியல்வாதிகளை நினைத்தால் வேதனையாக் உள்ளது.வேறென்ன சொல்ல?

enRenRum-anbudan.BALA said...

டோண்டு,
கருத்துக்கு நன்றி.
வஜ்ரா,
//எனக்கு என்னவோ இந்த ராய் அம்மணி ஜம்மு கஷ்மீர் விடுதலை இயக்கத் தலைவர்களுடன் கூடிக் குலாவுவதால், பணம் கொடுத்து அந்த அம்மணியை இப்படிச் செய்யச் சொல்கிறார்கள் என்று தோன்றுகிறது.

அருந்ததி பற்றி எனது இந்த பதிவைப் பார்க்கவும்
//
உங்கள் பதிவை படித்தேன் ! அம்மணி கொஞ்சம் டூ மச்சா பேசறாங்க ! எல்லாம் கருத்துச் சொதந்தரத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்தறாங்கன்னு போய்ட்டு இருக்க வேண்டியது தான் ;-)

enRenRum-anbudan.BALA said...

எலிவால்ராஜா,
நல்ல பேருங்க ஒங்க பேரு :) நன்றிங்க. வஜ்ரா உங்க கேள்விக்கு பதில் சொல்லிட்டாரு போல இருக்கு !

SK,
கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

enRenRum-anbudan.BALA said...

அனானி,
//naatla irukkiRa 10000 nirabaraathigalai konnu pOdaraan sir athukku enna solreenga? intha oruththan saagarathai paththi ivvala kavalai padareengalE.. ivanaala seththavanga kudumbam enna summaavaa ??
//
நல்லா உரைக்கிற மாதிரி கேட்டு இருக்கீங்க !

enRenRum-anbudan.BALA said...

செல்வன்,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

//நன்றி கெட்ட இந்த அரசியல்வாதிகளை நினைத்தால் வேதனையாக் உள்ளது.வேறென்ன சொல்ல?
//
நன்றி என்னிக்கு இருந்தது இப்ப கெடறதுக்கு ;-)

Muse (# 01429798200730556938) said...

பாலா,

தண்டனை வழங்குவது என்பது வெறுமே பழிக்கு பழி வாங்கும் ஒரு செயல் இல்லை. தண்டனையின் நோக்கம் இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் செய்யவிழைவதே. எந்த ஒரு தண்டனை அதிகபக்ஷம் சில கொடிய வேதனையான செயல்கள் முற்றிலும் மீண்டும் நிகழாவண்ணம் நடாதவாறு செய்கிறதோ, அல்லது குறைந்தபக்ஷம் அந்தக் கொடிய செயல்களைக் கட்டுப்படுத்துகின்றதோ அந்த தண்டனை குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படவேண்டும்.

மற்றொரு நாட்டின்மீது போர் என்பதுகூட ஓர்வகை தண்டனை விதிக்கும் செயல்தான். அஃது விழையா சூழ்நிலைகளில் எந்தத் தண்டனை அதிகபக்ஷமாக வழங்க இயலுமோ அதைச் செவ்வனே ஒரு அரஸு செயல்படுத்தவேண்டும்.

என் இந்தக் கருதுகோளின் அடிப்படையில் பாராளுமன்றத் தாக்குதல் உள்ளீடாக ஏனைய தீவிரவாதச் செயல்கள் மீண்டும் நிகழாவண்ணம் செய்ய எந்தத் தண்டனை உதவும் என்று தாங்கள் கருதுகிறீர்கள்?

(இதுபற்றித் தாங்கள் பதிலிறுக்கும் முன் இதுவரை வழங்கப்பட்டுவந்த தண்டனைகளால் ஏற்பட்ட விளைவு என்ன என்பதையும் சிந்தித்துப் பின் பதிலளியுங்கள்.)

said...

இன்று தினமலரில் வந்த ஒரு செய்தி கீழே...

-----------------------------------
ஆதரவற்ற சகோதரர்கள் இருவருக்கு விதிக்கப்பட்ட துõக்கு தண்டனையை எதிர்த்து போலீஸ் தரப்பினரே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் இன்னும் மனிதாபிமானம் சாகவில்லை என்பதை உணர முடிகிறது.

பஞ்சாபைச் சேர்ந்த சகோதரர்கள் குர்வெய்ல் சிங் மற்றும் ஜட்ஜ் சிங். கடந்த 2000ம் ஆண்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரை கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த பிறகு, அமிர்தசரஸ் கோர்ட் இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை, பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டும் உறுதி செய்தது. அதன்படி, வரும் 16ம் தேதி இவர்கள் இருவரும் துõக்கிலிடப்பட உள்ளனர்.

படிப்பறிவு இல்லாத, ஏழ்மை நிலையிலுள்ள இந்த சகோதரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யவில்லை. எந்த மனித உரிமை அமைப்பும் இவர்களுக்கு உதவ முன்வரவில்லை. இந்நிலையில், போலீஸ் தரப்பினரே இவர்களுக்காக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த மனு, இந்த வாரம் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. அதன் மூலம், இவர்களை வரும் 16ம் தேதி துõக்கில் போடுவதற்கு, இடைக்கால தடை பெற முடியும் என்று நம்பப்படுகிறது.

பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, ஐந்து போலீசார் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். அந்த வழக்கில், "முக்கிய குற்றவாளி'யாக குற்றம் சாட்டப்பட்ட முகமது அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஆர்ப்பரித்து வருகின்றன. ஆனால், ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற இந்த சகோதரர்களுக்கு எந்தவொரு மனித உரிமை அமைப்பும் உதவ முன்வரவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம்.
-----------------------------------

இதிலிருந்தே தெரியும் அருந்ததி ராய் போன்றோர்களின் மனித உரிமை போராட்டம் எவ்வளவு மதிப்புள்ளது என்று....

"""எனக்கு உன் உயிரின் மதிப்பு அது என்னை எந்த அளவு பிரபலப்படுத்தும் என்பதைப் பொருத்தது""" என்பதுதான் இவர்கள் கொள்கையோ ?

எனவே மக்களே இவர்கள் பார்வை உங்கள் ப்-அக்கம் விழவேண்டுமெனில் சின்ன தப்பெல்லாம் பண்ணாதீங்க,,,

:(((

said...

இன்று தினமலரில் வந்த ஒரு செய்தி கீழே...

-----------------------------------
ஆதரவற்ற சகோதரர்கள் இருவருக்கு விதிக்கப்பட்ட துõக்கு தண்டனையை எதிர்த்து போலீஸ் தரப்பினரே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் இன்னும் மனிதாபிமானம் சாகவில்லை என்பதை உணர முடிகிறது.

பஞ்சாபைச் சேர்ந்த சகோதரர்கள் குர்வெய்ல் சிங் மற்றும் ஜட்ஜ் சிங். கடந்த 2000ம் ஆண்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரை கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த பிறகு, அமிர்தசரஸ் கோர்ட் இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை, பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டும் உறுதி செய்தது. அதன்படி, வரும் 16ம் தேதி இவர்கள் இருவரும் துõக்கிலிடப்பட உள்ளனர்.

படிப்பறிவு இல்லாத, ஏழ்மை நிலையிலுள்ள இந்த சகோதரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யவில்லை. எந்த மனித உரிமை அமைப்பும் இவர்களுக்கு உதவ முன்வரவில்லை. இந்நிலையில், போலீஸ் தரப்பினரே இவர்களுக்காக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த மனு, இந்த வாரம் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. அதன் மூலம், இவர்களை வரும் 16ம் தேதி துõக்கில் போடுவதற்கு, இடைக்கால தடை பெற முடியும் என்று நம்பப்படுகிறது.

பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, ஐந்து போலீசார் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். அந்த வழக்கில், "முக்கிய குற்றவாளி'யாக குற்றம் சாட்டப்பட்ட முகமது அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஆர்ப்பரித்து வருகின்றன. ஆனால், ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற இந்த சகோதரர்களுக்கு எந்தவொரு மனித உரிமை அமைப்பும் உதவ முன்வரவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம்.
-----------------------------------

இதிலிருந்தே தெரியும் அருந்ததி ராய் போன்றோர்களின் மனித உரிமை போராட்டம் எவ்வளவு மதிப்புள்ளது என்று....

"""எனக்கு உன் உயிரின் மதிப்பு அது என்னை எந்த அளவு பிரபலப்படுத்தும் என்பதைப் பொருத்தது""" என்பதுதான் இவர்கள் கொள்கையோ ?

எனவே மக்களே இவர்கள் பார்வை உங்கள் ப்-அக்கம் விழவேண்டுமெனில் சின்ன தப்பெல்லாம் பண்ணாதீங்க,,,

:(((

We The People said...

//மந்திரிகளையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் காக்க வேண்டி (அவர்களில் பாதிக்கு மேல் காப்பாற்ற லாயக்கற்றவராக இருப்பினும்!) போரிட்டு உயிர் துறந்த பாதுகாப்புப் படைவீரர்களின் தியாகம், இது குறித்து பேசும் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்று.//

இதைத்தான் நான் நினைக்கிறேன். சந்தன கடத்தல் வீரப்பன், ஆட்டோ சங்கர், அப்சல் போன்ற கிரிமினல்களுக்கு பாய்ந்து ஆதரவு தரும் இந்த மனித உரிமை இயக்கங்களும், குழலி & கோ கோஷ்டிகளும் ஏன் ஒரு சாதரண குடும்ப பிரச்சனையில் கொலை செய்து மரண தண்டனைக்கு காத்து இருக்கும் மற்ற குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருக்கிறார்கள்!!! இதில் உள்ள Hidden agenda என்ன? விளம்பரமா? பிரிவினைவாத ஆதரவா?

enRenRum-anbudan.BALA said...

Muse,

Thanks for your views. I will get back later.

Anony,
//இதிலிருந்தே தெரியும் அருந்ததி ராய் போன்றோர்களின் மனித உரிமை போராட்டம் எவ்வளவு மதிப்புள்ளது என்று....

"""எனக்கு உன் உயிரின் மதிப்பு அது என்னை எந்த அளவு பிரபலப்படுத்தும் என்பதைப் பொருத்தது""" என்பதுதான் இவர்கள் கொள்கையோ ?
//
Very Important point, I think !!!

We the people,
Welcome, Thanks !
I read your posting.

said...

**************
ஆனால், ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற இந்த சகோதரர்களுக்கு எந்தவொரு மனித உரிமை அமைப்பும் உதவ முன்வரவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம்.
*************
வந்தால் விளம்பரம் கிடைக்காதே.

said...

ரோசா வசந்த்தின் பதிவில்

என் இப்பதிவின் சுட்டியை இட்டிருந்தேன். என் பதிவின் 2-3 பத்திகள் வாசித்து விட்டு அவரது பதிவில் அவர் எழுதிய பின்னூட்டமும், எனது பதிலும், ஆகிய 2 பின்னூட்டங்கள் கீழே, தொடர்ந்து வாசிக்கவும்.

********************************
பாலா, எனது கருத்துக்களை தெளிவாகவும், பலமான வாதமாகவும் முன்வைத்திருப்பதாக எழுதியதற்கு நன்றி. ( நான் எழுதியதை ஒருமுறையாவது ஒழுங்காக நீங்கள் படித்துவிட்டுத்தான் இதை சொல்கிறீர்களா என்று ரொம்பவே சந்தேகம் இருப்பதால், இந்த பாராட்டை ஏற்க மிகவும் சங்கடமாக இருக்கிறது. ) ஆனால் ஒரு பதில் நாகரீகத்திற்கு கூட உங்கள் பதிவு பற்றி என்னால் அப்படி சொல்ல முடியவில்லை. படிக்க முனைந்தேன்; ரொம்ப கொடுமையாக இருந்தது. இப்போதெல்லாம் இது போன்றவற்றை முழுமையாக படித்து பதில் சொல்லும் பொறுமையை வேண்டுமென்றே வைத்துகொள்தில்லை. அப்படி செய்வதற்கு சிறிய அளவில் கூட பலனும், ரெலவன்ஸும் இருப்பதாக தோன்றவில்லை. அதனால் உங்கள் பதிவை சில பத்திகளுக்கு மேல் முழுவதும் படிக்க முனையவில்லை. (செல்வன் எழுதியது அதைவிட மகா கொடுமை. ஆனால் ஏற்கனவே அவர் பதிவுகளை படித்திருந்த எனக்கு அதைவிட அதிகமாக அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.)

ஏதோ சும்மா போகிற போக்கில் கருத்து சொல்வதாய் நினைக்கக் கூடாது என்பதற்காக சொல்கிறேன். (அப்படியில்லாமல் மாய்ந்து மாய்ந்து எதிர்கேள்விகளுக்கு பதில் அளித்தாலும் (அளித்த போதும்), போகிற போக்கில் சொல்லி செல்வதாகவே சொல்வார்கள் என்பதும் தெரியும்.)

உதாரணமாய் இரண்டு விஷயங்கள். அஃப்சல் பாராளுமன்ற தாக்குதலை திட்டமிட்ட மூளை கிடையாது. தாக்குதலுக்கு உதவியதாக மட்டுமே அவர்மீது நீதிம்னறத்தில் குற்றம் சாட்டப்பட்டு, அது உறுதிபடுத்தப் பட்டுள்ளது. அது எந்த அளவிற்கு தீவிரம் என்பதை முன்வைத்து விவாதம் அமையவேண்டும் என்பதுதான் நான் எழுதியது. நீங்களோ மாற்றி மாற்றி, இந்திய பாராளுமன்றத்தை தாக்க திட்டம் தீட்டியவனை என்ன செய்யலாம் என்பது பற்றி 'விவாதித்து' இருந்தீர்கள். இந்த தாக்குதலை திட்டமிட்டு நிறைவேற்றியவர்களை இந்திய சட்டம் நெருங்கப் போவதில்லை என்பது என் பதிவில் உள்ள ஒரு வரி.

அடுத்து, சட்டம் தன் கடமையை செய்யும் என்று சொல்பவர்களை பொதுப்புத்தி என்று நான் சொன்னதாக எடுத்துக் கொண்டு பதிவு போகிறது. சட்டம் தன் கடமையை செய்வது என்பதற்கு என்ன பொருள், கடமையை செய்வது என்பதற்கு - இந்த வரியில் குறிப்பது போல் - ஒற்றை அர்த்தம் ஏதாவது இருக்கிறதா, அதெப்படி சட்டம் பலனை எதிர்பார்க்காமல் தன் கடமையை செய்யும் என்ற கேள்விகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். (அதை இங்கே எழுப்புவது ரொம்ப அதிகப்படியாக இருக்கும்). நான் பொதுபுத்தி என்று சொன்னது, ஒரு குற்றத்தில் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்படும் நபரை முதன்மை குற்றவாளியாகவும், அவர்தான் பாராளுமன்றத்தை தாக்க எல்லாவகையிலும் காரணம் என்பது போலவும், அவரை பற்றிய எந்த பரீசீலனையிலும் ஈடுபடுவது மகா பாதகமான செயல் என்று சொல்வதை பற்றியும். இந்த பொதுபுத்திக்கு முக்கிய உதாரணமாக அளித்திருந்தது அஃப்சலை அல்ல, கிலானி என்ற அப்பாவியை! அவர் அனுபவித்த கொடுமைகளுக்கு என்ன பதில் என்பது வேறு கேள்வி. அவர்மீது குற்றச்சாட்டு இருந்த வரையில் அவரை பொதுபுத்தி எப்படி பார்த்தது என்பதும், ஒருவேளை அவர் (போலி ஆதாரங்களை மீறி) தப்பித்திருக்கவில்லை என்றால் பொதுப்புத்தி எப்படி பார்க்கும் என்பதை பற்றியது. (இன்னொரு உதாரணமாய் ராஜிவ் கொலை வழக்கில் கூட்டமாய் தூக்கில் போட தீர்ப்பளித்தது பற்றியது.) கொஞ்சம், நேர்மையாக சிந்திக்கும் பழக்கம் உள்ள எவரும் கிலானி பற்றி பேசிவிட்டு மற்றவற்றை பேசியிருக்க வேண்டும்.

நான் சொன்ன எதையும் சிறிய அளவில் கூட கணக்கில் கொள்ளாமல் எதையோ இத்தனை பேர்கள் எழுதுகிறார்கள். அதற்கு கூட்டம் கூட்டமாய் பாராட்டுக்கள் வேறு! இதை பார்த்து மனச்சோர்வு எதுவும் எனக்கு வரவில்லை. ஏனெனில் வேறு எதையும் நான் இங்கே எதிர்பார்க்கவில்லை. மற்றபடி இந்த பதிவை எழுதியது, வாய்திறப்பது என் கடமை என்று தோன்றியதால் மட்டுமே. கொள்வாரே இல்லாமல் போனால் கூட கவலைப்படாத முதிர்ச்சி வந்துவிட்டதாக இப்போது நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

மீண்டும் உங்கள் கருத்துக்கு நன்றி,

By ROSAVASANTH, at 10/09/2006 4:23 PM
****************************

enRenRum-anbudan.BALA said...

At

http://rozavasanth.blogspot.com/2006/10/blog-post_116013846931461247.html
**********************************
My response:
//( நான் எழுதியதை ஒருமுறையாவது ஒழுங்காக நீங்கள் படித்துவிட்டுத்தான் இதை சொல்கிறீர்களா என்று ரொம்பவே சந்தேகம் இருப்பதால், இந்த பாராட்டை ஏற்க மிகவும் சங்கடமாக இருக்கிறது. )
//
இரு முறை படித்தேன். இதை எழுதுமுன் மறுபடி படித்தேன்.

//ஆனால் ஒரு பதில் நாகரீகத்திற்கு கூட உங்கள் பதிவு பற்றி என்னால் அப்படி சொல்ல முடியவில்லை. படிக்க
முனைந்தேன்; ரொம்ப கொடுமையாக இருந்தது. இப்போதெல்லாம் இது போன்றவற்றை முழுமையாக படித்து பதில்
சொல்லும் பொறுமையை வேண்டுமென்றே வைத்துகொள்தில்லை.
//
முதலில், நான் அஃப்சலுக்கு மரணதண்டனை தான் சரி என்று எங்கும் வாதிடவில்லை. நான் என் பதிவில் கூறியது
"தீவிரவாதத்திற்கு துணை போனதாக அஷப்சலுக்கு மரண தண்டனை வழங்கியது சரியா தவறா என்று தனிப்பட்ட அளவில் கருத்து எதுவும் கூற வரவில்லை. இதன் பின்னணி பற்றி ஓரளவு தெரியும் என்பது தவிர, முழுமையாக படித்துத்
தெளியாததும் இதற்கு ஒரு காரணம்.". தலைப்பே 'அஃப்சல் மரண தண்டனை --- சில எண்ணங்கள்' என்பது தான்.
மேலும், நடுநிலைமையாகத் தான் எழுதியிருப்பதாக என் எண்ணம். உங்களுக்கு கொடுமையாகப் படுவது,
இன்னொருவருக்கு நன்றாக / நேர்மையாக இருப்பதாகப் படலாம்.

//உதாரணமாய் இரண்டு விஷயங்கள். அஃப்சல் பாராளுமன்ற தாக்குதலை திட்டமிட்ட மூளை கிடையாது. தாக்குதலுக்கு உதவியதாக மட்டுமே அவர் மீது நீதிம்னறத்தில் குற்றம் சாட்டப்பட்டு, அது உறுதிபடுத்தப் பட்டுள்ளது. அது எந்த அளவிற்கு
தீவிரம் என்பதை முன்வைத்து விவாதம் அமையவேண்டும் என்பதுதான் நான் எழுதியது. நீங்களோ மாற்றி மாற்றி, இந்திய பாராளுமன்றத்தை தாக்க திட்டம் தீட்டியவனை என்ன செய்யலாம் என்பது பற்றி 'விவாதித்து' இருந்தீர்கள்.
//
'திட்டம் தீட்டியது' என்று ஓர் இடத்திலும், 'துணை போனது' என்று பதிவின் ஆரம்பத்திலும், இரு விதமாக எழுதியது தவறு
தான். இந்த தீவிரவாதப் பிரச்சினையில், என்னளவில், திட்டம் தீட்டுவதற்கும், நடத்த உதவுவதற்கும் (logistics) பெரிய வித்தியாசமில்லை. மாறுபடுவது உங்கள் உரிமை !

நான் கேட்ட, "திட்டம் தீட்டி சாதாரண பொதுமக்களை குண்டு வைத்துச் சிதறடிப்பது, 'தேசத் துரோகம்' என்ற வரையறைக்குள் வருமா, வராதா ??? அதற்கு மரண தண்டனை வழங்கலாமா, கூடாதா ??? " என்பது, அஃப்சல் பாராளுமன்றத்தையே தாக்குவதற்கு உதவி செய்தான், அது தேசத்துரோகம், அதனால் மரண தண்டனை சரி என்று
சொல்பவர்களுக்காக ! நீங்கள் வேறு மாதிரி அர்த்தப்படுத்திக் கொண்டு விட்டீர்கள் என்பது என் எண்ணம் !

//ஆனால் எந்த வித விவாதத்திற்கும் தயாராக இல்லாத மனங்கள், கொல்வது மட்டுமே தர்மம் என்றும், அதில் இருந்து
விலகி சிந்திப்பவர்கள் எல்லாம் தேசதுரோகிகள் என்று நினைக்கும் ஒரு சூழலில்
//
என்று நீங்கள் கூறியதைத் தான், நானும், "அஃப்சலின் தண்டனைக்கு எதிராக, காஷ்மீரத்துப்பெண்டிர், "Brother Afsal, We are proud of you" என்று பேனர் கட்டி ஊர்வலம் நடத்துவது மற்றும் "பாராளுமன்றத்தைத் தாக்கியது தேசத் துரோகத்தின் உச்சம்" என்று கூக்குரலிடுவது என்று இரு தீவிர நிலைப்பாடுகளையும், அவற்றின் நடுவே பலவிதமான
நிலைப்பாடுகளையும் நாம் பார்க்கிறோம்." என்று சுட்டியிருந்தேன் !!!!!

நீங்கள் கூறிய, "மிக நிதானமாக செய்யப்படும் அங்கீகரிக்கப்பட்ட கொலையை செய்வது, ஒரு நாகரீக சமுதாயத்தில் நடக்க
முடியாது என்ற கருத்தின் அடிப்படையில் தூக்கு தண்டனையை எதிர்க்கிறேன்." என்பதற்கு பொதுவான (அஃப்சல் விஷயத்தை முன் வைத்து அல்ல!) மாற்றுக் கருத்தாக

"இப்படி, பொத்தாம் பொதுவாக, 'நாகரீக' சமுதாயம் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு, திட்டம் தீட்டி, குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதம், எதிர்க்கத் திராணியில்லா இளம் சிறுமியை
வன்புணர்ந்துக் கொல்லும் வக்ரம் போன்றவைகளில் ஈடுபடும் கயவர்கள், "நாகரீக" சமுதாயத்திலிருந்து களையப்பட
வேண்டியவர்களே என்ற பதிலை கூற இயலும். மரண தண்டனையை எதிர்ப்பவர்களின் "பொதுப்புத்தி" என்று அவர்கள் கூறும் காரணங்களையும் எளிதாக நிராகரிக்க இயலும் !!!" என்று கூறியிருந்ததற்குக் காரணம், நீங்கள் அஃப்சலைத் தாண்டி
எடுத்த பொது நிலைப்பாடுக்காக மட்டுமே !!!

//அந்த வகையில் செயல்படும் சிறுபான்மை அறிவுஜீவிகளை நான் மிகவும் மதிக்கிறேன்.
//
ஒரு அப்சர்வேஷனாக, இந்த மரண தண்டனை எதிர்ப்பாளர்கள், high profile கேஸ்களில் மட்டும் மூக்கை நுழைத்துப் போராடுவது, அவர்கள் நோக்கத்தின் மேல் சந்தேகம் கொள்ள வைப்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

நீங்கள் என் பதிவை முழுதும் படிக்கவில்லை என்றதால்,

"அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவிப்பதை "பொதுப்புத்தி" என்று நிராகரிப்பது பற்றிப் பார்ப்போம். ஒரு குற்றத்திற்கு என்ன தண்டனை என்பது, அது நிகழ்ந்த சூழல், விசாரணையின் வாயிலாக சட்டத்தின் முன்
நிறுத்தப்பட்டவை, அது போன்ற குற்றங்களைத் தடுக்க deterrent ஆக தீர்ப்பு இருக்க வேண்டிய அவசியம், என்று பல விஷயங்களைச் சார்ந்தது." என்றும்

"போரில் ஈடுபடுவதும், மிருகங்களை மதத்தின் பெயரால் பலியிடுவதும் கூட நாகரீகமான சமுதாயங்கள் செய்யக் கூடாதது தான் ! தீவிரமான குற்றங்களால், தனிப்பட்ட அளவில் பெருமளவு பாதிக்கப்பட்ட / பாதிக்கப்படும் வாய்ப்புள்ள ஜீவன்களுக்கும், சாதாரண பொதுமக்களுக்கும், அரசும், சட்டமும், சமூகமும் நம்பிக்கையூட்டும் வண்ணம் செயலாற்றுவது மிக அவசியம் ! சமூகத்திற்கு அது கடமையும் கூட ! இதையே மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்." என்றும்

எழுதியிருந்தும், உங்களுக்கு பதிவே "கொடுமையாக"ப் பட்டால், 'அது உங்கள் கருத்து' என்பதைத் தவிர சொல்ல ஒன்றுமில்லை. நன்றி.

By enRenRum-anbudan.BALA, at 10/09/2006 9:03 PM
*******************************

Unknown said...

ரோசாவசந்த் என்னை பற்றி தந்த சர்டிபிகேட்டுக்கு நன்றி:)அதை தவிர வேறெதையும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதால் அதை பற்றி கவலைபட ஒன்றுமில்லை:)

//உதாரணமாய் இரண்டு விஷயங்கள். அஃப்சல் பாராளுமன்ற தாக்குதலை திட்டமிட்ட மூளை கிடையாது. தாக்குதலுக்கு உதவியதாக மட்டுமே அவர்மீது நீதிம்னறத்தில் குற்றம் சாட்டப்பட்டு, அது உறுதிபடுத்தப் பட்டுள்ளது. அது எந்த அளவிற்கு தீவிரம் என்பதை முன்வைத்து விவாதம் அமையவேண்டும் என்பதுதான் நான் எழுதியது//

திட்டமிட்ட மூளை பாகிஸ்தானில் இருக்கிறது.சரி அதை விடுங்கள்

இந்திய பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தி, அதன் பிரதமரையும் மந்திரிகளையும் கொன்று நாடெங்கும் கலவரம் வரவைத்து, ஆயிரக்கணக்கான மக்களை சாக அடிக்க திட்டமிட்டு.....சொல்லவே அலுப்பாக இருக்கிறது..

இப்பெர்ப்பட்ட குற்றத்தில், வெறுமனே "உதவினான். அதனால் அவனை தூக்கில் போடாதே" என்பது எத்துனை பெரிய ஜல்லியடி(ரோசா என்பதால் தான் இத்தனை ஆக சொல்கிறேன்..ஹ்ம்ம்)

"...உதவினான்" என்று எத்தனை பெரிய பூசணியை ஒரு கவளம் சோற்றில் வைத்து மறைக்கிறார் ரோசா?

//அது எந்த அளவிற்கு தீவிரம் என்பதை முன்வைத்து விவாதம் அமையவேண்டும் என்பதுதான் நான் எழுதியது//

இது வெற்றி பெற்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்?இது தீவிரம் இல்லையா?வெறுமனே இந்த திட்டத்துக்கு "உதவி" மட்டுமே செய்தார் என்பது சரியா?ஏனய்யா எப்பெர்ப்பட்ட காரியம் இது? இதில் தீவிரம் குறைவு, மைல்டான தீவிரம் என்பதெல்லாம் என்ன வகையான வாதங்கள்?

//நான் பொதுபுத்தி என்று சொன்னது, ஒரு குற்றத்தில் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்படும் நபரை முதன்மை குற்றவாளியாகவும், அவர்தான் பாராளுமன்றத்தை தாக்க எல்லாவகையிலும் காரணம் என்பது போலவும், அவரை பற்றிய எந்த பரீசீலனையிலும் ஈடுபடுவது மகா பாதகமான செயல் என்று சொல்வதை பற்றியும். இந்த பொதுபுத்திக்கு முக்கிய உதாரணமாக அளித்திருந்தது அஃப்சலை அல்ல, கிலானி என்ற அப்பாவியை! //

நான் எழுதியது அப்சலை பற்றி மட்டுமே.ஒரு வழக்கில் சந்தேகப்படவர்கள் அனைவர் மீதும் குற்றம் சாட்டுவார்கள்.ஆதாரம் இல்லாததால் அல்லது சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை வைத்து சிலர் தப்புவார்கள்.சிலர் மாட்டுவார்கள். சிலர் தவறாக குற்றம் சாட்டப்படவும் செய்வார்கள்.

//கொஞ்சம், நேர்மையாக சிந்திக்கும் பழக்கம் உள்ள எவரும் கிலானி பற்றி பேசிவிட்டு மற்றவற்றை பேசியிருக்க வேண்டும்.//

பதிவெழுவதில் அவரவர் விருப்பத்துக்கு தான் எழுதுவார்கள். அதில் ஏதாவது விட்டுபோயிருந்தால் பின்னூட்டத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்கிறார்கள். இதை ஏன் எழுதலை, அதை ஏன் எழுதலை என்று கேட்டால் எத்தனையை எழுத முடியும்? கிலானி பற்றி கட்டுரை பின்னூட்டத்தில் யாராவ்து கேட்டிருந்தால் பதில் சொல்லிவிட்டு போகிறேன். அவ்வளவுதான்.

enRenRum-anbudan.BALA said...

செல்வன்,
தங்கள் மீள் வருகைக்கும், விரிவான விளக்கத்திற்கும் நன்றி.
அ·ப்சல் தண்டனை குறித்து, எல்லாரும் நிறைய பேசியாச்சுன்னு நினைக்கிறேன் !!!
எ.அ.பாலா

தயா said...

ஜனாதிபதியின் பரீசிலனையில் கருணை மனு இருப்பதனாலோ என்னவோ இன்று உச்சநீதிமன்றம் அதிரடியாய் கலாமை எச்சரிக்கும் வகையில' ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆந்திரா கைதி ஒருவரின் தண்டனையை ஆளுநர் ரத்து செய்ததை எதிர்ப்பதான வழக்கில், மதம் சாதி அரசியல் காரணங்கள் கருதி இவைகளை அனுமதிக்கக்கூடாது எனவும் பொது நலன் அடங்கியிருந்தால் ஒழிய நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும் அவற்றையும் நீதிமன்றம் நிராகரிக்கலாம் என்று சொல்லியிருக்கிறது.

enRenRum-anbudan.BALA said...

தயா,
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.

said...

nalla alasal, bala

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails